இராமநாதபுரம்

பசும்பொன் வந்து திரும்பிய ஆய்வாளர் வாகனம் விபத்து : போலீஸ்காரர் பலி

பசும்பொன் வந்து திரும்பிய ஆய்வாளர் வாகனம் விபத்து போலீஸ்காரர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தேவர் ஜெயந்தி முன்னிட்டு கமுதி பகுதிகளில் பாதுகாப்பு சென்றிருந்த நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளரின் பொலிரோ காவல் வாகனம் பணி முடிந்து நாகப்பட்டினம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது. திருவாரூரில் காவல் ஆய்வாளர் இறங்கிய பிறகு, காவலர் ஜனார்த்தனன் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
நாகப்பட்டினம் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருக்கண்ணங்குடி ஆர்ச் அருகே, எதிரே வாஞ்சூரில் இருந்து அரியலூர் நோக்கி கரி ஏற்றி வந்த லாரியும் பொலிரோ காரும் நேருக்கு நேர் பலமாக மோதி கொண்டன. இதில்
காரை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டி கீழப்பனையூரைச் சேர்ந்த முருகப்பா மகன் காவலர் ஜனார்த்தனன் (2020 பேட்ச், PC 609) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த லாரியை நன்னிலம் வட்டம் கீழச்சன்ன நல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (47) ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து
தகவலறிந்து விரைந்த கீழ்வேளூர் போலீசார் உடலைக் கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த காவலர் ஜனார்த்தனனுக்கு (வயது சுமார் 28) திருமணமாகி சில ஆண்டுகளே ஆகின்றன. இவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது சக காவலரின் அகால மரணம்நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை யினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட உயர் காவல் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button