இராமநாதபுரம்
புதிய பேருந்து சேவை

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து சேவை கிடைக்கப்பெற இராமநாதபுரத்தில் இருந்து களரி வழியாக உத்திரகோசமங்கை, இராமநாதபுரத்தில் இருந்து பொட்டகவயல் மற்றும் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேரான்கோட்டை தெற்கு கரையூர் உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.





