தமிழ்நாடு

ஹைக்கூ நூல் ‘வே’ வெளியீடும், கவிஞர்களின் பகிர்வும்…

ஹைக்கூ நூல் ‘வே’ வெளியீடும், கவிஞர்களின் பகிர்வும்…

சென்னை. ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 16-ஆவது நிகழ்வில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடும், ஹைக்கூ கவிஞர்களின் பகிர்வரங்கமும் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு கவிஞர் ரமா ராமநாதன் தலைமையேற்றார். கவிஞர் மு.கவிதா சரவணன் அனைவரையும் வரவேற்றார். 

கவிஞர் ஜோ.டெய்சி ராணி எழுதிய ‘வே’ ஹைக்கூ கவிதை நூலினை லண்டன் திருவள்ளுவர் சங்கச் செயலாளர் முனைவர் சங்கர் வெளியிட, நூலாசிரியரின் தாயார் ஜோ.மங்களம் ஜோசப் பெற்றுக்கொண்டார். 

ஹைக்கூ நூலைத் திறனாய்வு செய்து, முனைவர் ஜெயலெட்சுமி பேசினார். நூலாசிரியர் கவிஞர் ஜோ.டெய்சி ராணி ஏற்புரை வழங்கினார்.

‘ஹைக்கூ முற்றம்’ 13-ஆவது மின்னிதழை முனைவர் லண்டன் சங்கர் வெளியிட, ஓவியக்கவிஞர் அமுதபாரதி பெற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற ஹைக்கூ
வாசிப்பரங்கில் கவிஞர்கள் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், புதுகை புதல்வன், சு.பீர்முகம்மது, ராஜா முகம்மது, முனைவர் பரிமளா செல்வமணி, கா.பாபுசசிதரன் ஆகியோர் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர். சிறந்த கவிதைகளுக்கு நூல் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், திரைப்பட இயக்குநர் என்.குமார், பாக்கியராஜ் பரசுராமன், அரசுக் கல்லூரி முதல்வர் சு.மாதவன், முனைவர் அரங்க.மல்லிகா, பேராசிரியர் தமிழ் இயலன், பாடலாசிரியர் செந்தமிழ் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.

நிறைவாக, அக்சயா நன்றி கூறினார்.

இணைப்பு: படங்களும், படக்குறிப்புகளும்:

படம்: 1

   ‘ஹைக்கூ முற்றம்’ 13-ஆவது மின்னிதழை முனைவர் லண்டன் சங்கர் வெளியிட, ஓவியக்கவிஞர் அமுதபாரதி பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அருகில், கவிஞர்கள்
மு.முருகேஷ், ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், ரமா ராமநாதன், ஜோ.டெய்சி ராணி ஆகியோர் உள்ளனர்.

படம்: 2
  கவிஞர்  ஜோ.டெய்சி ராணி எழுதிய ‘வே’    ஹைக்கூ கவிதை நூலினை லண்டன் திருவள்ளுவர் சங்கச் செயலாளர் முனைவர் சங்கர் வெளியிட, நூலாசிரியரின் தாயார் ஜோ.மங்களம் ஜோசப் பெற்றுக்கொண்டார். அருகில், கவிஞர் ரமா ராமநாதன், கவிஞர்கள் மு.முருகேஷ்,  ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், 
நூலாசிரியர் கவிஞர் ஜோ.டெய்சி ராணி ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button