புதிய மின் மாற்றி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அபிராமம் மின் பிரிவிற்கு உட்பட்ட ஆ_தரைக்குடி கிராமத்தில் மற்றொரு பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தரைக்குடி SS6 புதிய மின் மாற்றி ரூபாய் 4,04,901 மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் இயக்கி வைத்தார்,

இந்நிகழ்வில் கமுதி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வாசுதேவன்,மின் மேற்பார்வை பொறியாளர் கணேசன், செயற்பொறியாளர் பாலமுருகன் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர் ஜகுபர் சாதிக் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் ஜாகிர் உசேன், கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன்,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் தமிழ்ச்செல்விபோஸ் மற்றும் பாலு முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சித்ராதேவிஅய்யனார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராமர், அவைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம், நந்தகோபால், அரசு வழக்கறிஞர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




