இராமநாதபுரம்

10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்
பள்ளி நிர்வாக குழுவினர் பாராட்டி பரிசுத்தொகை வழங்கினர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காசிகா சக்தி
10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி நிர்வாக குழு சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது . விழாவிற்கு
பள்ளி நிர்வாக குழு செயலர் சங்கர் தலைமை
தாங்கி, மாணவியை பாராட்டி பரிசுத்தொகை வழங்கினார். மேலும் விழாவில் பள்ளி நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் குழந்தைராஜன், ஜெகன், தலைமை ஆசிரியை சிந்துமதி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button