கீழக்கரையில் பட்டா குறைதீர் சிறப்பு முகாம்

கீழக்கரையில் பட்டா குறைதீர் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஹபிப் ரஹ்மான், கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், தலைமை நில அளவர் வினோத், கீழக்கரை வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, கணினிப் பதிவு திருத்தம், உழவர் அட்டை வழங்குதல் மற்றும் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் வருவாய்த்துறை சார்ந்த குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் இதுபோன்




