இராமநாதபுரம்

மாணவ மாணவியர்கள் முதல்வர்க்கு கோரிக்கை . .

மாணவ மாணவியர்கள் முதல்வர்க்கு கோரிக்கை . .

                               ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனுக்கு உட்பட்டது முஸ்டக்குறிச்சி ஊராட்சி ஆகும் இதில் க.நெடுங்குளம்   திருச்சிலுவைபுரம் புதுப்பட்டி பெருமான் குடும்மன்பட்டி ஆசூர் சி.மணக்குளம் பெ.மணக்குளம் வரை உள்ள ஊர்கள் இருக்கும் இந்த கிராமங்களை உள்ளடக்கி கமுதி To பரளச்சி 5 நம்பர் டவுண்பஸ் காலை11 மணிக்கும் இரவு 7 மணிக்கும் கமுதி பேரூந்துநிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போகும் போது 5 பேர் இருப்பார்கள் தேவையில்லாத நேரத்தில் பேரூந்து இயக்கப்படுவதால் பயனற்று போய் விடுகின்றது இதனை பள்ளி மாணவ மாணவியர்கள் வேலைக்கு செல்வோர் நலன்கருதி திருச்சிலுவைபுரம் மற்ற கிராமத்தினர்கள் சார்பில் பல மனுக்கள் அனுப்பியும் எந்தபயனும் இல்லை இதனால் கடந்த 5 வருடமாக இந்த பகுதி பொதுமக்கள் மாணவ மாணவியர் வேலைக்கு செல்வோர் எல்லாம் ஆட்டோ டாடா ஏஜ் பைக்குகளில் வந்து செல்கின்றனர் கல்விக்காக ஆட்டோவில் வந்து ஆட்டோவில் திரும்பும் மாணவ மாணவியர்கள் தமிழக முதல்வர்க்கு பஸ்வசதி கேட்டு வீடியோவை 14-7-2026 ல் பதிவிட்டுள்ளார்கள் மேலும் இதே  ஊரைசேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் அதில் பள்ளிமாணவ மாணவியர்களின் வசதிக்காக கமுதி பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 7 -30 மணிக்கும் மாலை 5 மணிக்கும் புறப்பட்டு  வரும் வகையில் புதிய பேரூந்து வசதியினை செய்துதர வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் திருச்சிலுவைபுரம் கிராமத்திலிருந்து கமுதிக்கு சுமார் 40.          குழந்தைகள் படித்துவருவதாகவும் இந்தபகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கமுதியில் படித்துவருவதால் இவர்களின் படிப்பிற்கும் எதிர்காலம் கருதி  தமிழகமுதல்வர் அவர்கள் புதிய பேரூந்துனை விட ஆவண செய்ய வேண்டுமாய் இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button