இராமநாதபுரம்

முதுகுளத்தூர் நகர் தேவர் உறவின் முறை சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர் நகர் தேவர் உறவின் முறை சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நகர் தேவர் உறவின் முறை சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி தலைவராக திருமுருகன், துணைத் தலைவராக குருபழனி நிருபர், செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் முத்துராமலிங்கம், இணைச் செயலாளர் முத்துக்குமார் நிருபர், பொருளாளர் முருகன் வழக்கறிஞர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக செல்லத்துரை, செல்வக்குமார், ஹரி, பிரகாஷ், கார்த்திக், முருகவேல், பொன் மணிகண்டன், குமார் டிரைவர், முத்துச்சாமி, முத்துராமலிங்கம் Ex ARMY, தணிக்கையாளராக தியாகராஜன் ஆகியோர் சங்க உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், சங்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகர் தேவர் உறவின் முறை சங்க மூத்த உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button