இராமநாதபுரம்
கீழக்கரை: அதிரடி சோதனையில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது*

கீழக்கரை: அதிரடி சோதனையில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது*

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் நைனாரப்பா தர்கா பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக ஹூருல் முஷரப் (25), முஹம்மது ஜெசீர்கான் (29), கருணை முஹம்மது அணஸ்கான் (45) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




