இராமநாதபுரம்

இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் அரண்மனையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் ரமே. பிரபாகர்,CPI(M) மாவட்டச் செயலாளர் குருவேல் , CPI(ML) மாவட்டச் செயலாளர் முருக பூபதி ஆகியோர்கள் தலைமையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த, தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர்கள் விரோதத் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான, மதுரை மாவட்ட மண்டலச் செயலாளர் – மதுரை மாநகராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் இன்குலாப் கலந்து கொண்டு கண்டனை உரை ஆற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மண்டலச் செயலாளர் திரு.செ.விடுதலை சேகரன், மண்டலத் துணைச் செயலாளர் பழனிக்குமார், மாவட்டப் பொருளாளர் சே. பாண்டித்துரை மாவட்டத் துணைச் செயலாளர் அ. மீரான் முகைதீன், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்ந. பாலமுருகன், மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை கிட்டு இசுலாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் மு. முகமது சபீர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் ரவிவளவன், இராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் அரியவன், மண்டபம் ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், திருவாடானை ஒன்றியச் செயலாளர் நா. குமார், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் அன்சாரி, இராமநாதபுரம் நகர செயலாளர் மூ. சக்திவேல், கீழக்கரை நகர் செயலாளர் அயன்ராஜ், இராமேஸ்வரம் நகர் பொருளாளர் விடுதலை குமரன், இசுலாமிய சனநாயகப் பேரவை மாவட்டத் துணை அமைப்பாளர் முஜிப் ரகுமான், சமூக ஊடக மையம் மாவட்டத் துணை அமைப்பாளர் மேகலைவன், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் இன்னாசி முத்து,மதியழகன், கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button