General News
சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன தில்லியிலே
வைரமுத்து
சிறுதுளிகள்
சேர்ந்துவிட்டன தில்லியிலே
சிறுதுளியின் அடுத்த நிலை
என்ன என்பதைப்
பழமொழி அறிந்தவர்கள்
அறிவார்கள்
மழை வெள்ளத்திலும் வலியது
மனித வெள்ளம்
வங்கதேசமும் நேபாளமும்
இலங்கையும் அந்த வெள்ளத்தில்
மூழ்கிய கதை
மூத்தவர்கள் அறியாததில்லை
ஆர்ப்பாட்டம் அடங்கவும்
அமைச்சர் பதவி நிலைக்கவும்
ஒரே தீர்வு
நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான்
அரசுக்கு
அது பின்னடைவாகிவிடும்
என்று பேசப்பட்டால்
சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது
அதுதான்
நீட் தேர்வை
மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது
இரண்டில் ஒன்று
நாடு எதிர்பார்க்கிறது

