உலக குருதிக் கொடையாளர் தினம்

உலக குருதிக் கொடையாளர் தினம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அமுதாராணி வரவேற்ப்
புறையாற்றினார் சிறப்பு அழைப்பாளாராக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார் அதனைத்
தொடர்ந்து வருடத்திற்கு நான்கு முறை ரத்த தானம் செய்த இராமநாதபுரம் மாவட்டம் கல்வித் தந்தை மருத்துவர் இ.எம். அப்துல்லா நினைவுக் குருதிக்கொடை பாசறையின் உறுப்பினர்கள் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியின் நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் மனோஜ் குமார், மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பாளர் மருத்துவர் நூர்முஹம்மது,
இரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி மருத்துவர் மணிமொழி,
மற்றும் மருத்துவர் ஞானக்குமார்,
மருத்துவர் மலையரசு, தமுமுகவின் மாவட்ட மருத்துவர் அணி பொறுப்பாளர் முகம்மது தமீம், தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது, உட்பட பலர் கலந்து கொண்டனர்




