இராமநாதபுரம்

கமுதியில் மதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்!!

கமுதியில் மதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்!!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
கமுதியில் மதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், கழக பொதுச் செயலாளர் வைகோ வழிகாட்டுதலின்படி, கழகமுதன்மைச் செயலாளர்
துரைவைகோ எம்பி ஆலோசனையின்படி,
துணை பொதுச் செயலாளர் பூமிநாதன் முன்னிலையில், மாவட்ட
அவைத் தலைவர் பிரகாசம் தலைமையில்
இந்த கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருகை தந்தஅனைவரையும் தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ், தணிக்கை குழு உறுப்பினர் குணா, மீனவரணி செயலாளர்
பேட்டரிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபாண்டி
நன்றி கூறினார்
கூட்டத்தில், வரும் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாநாட்டிற்க்கு 100 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது மற்றும் செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை, அக்டோபர் 30 -ம் தேதிபசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை போன்றவற்றில் கலந்து கொள்ளவது சம்மதமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . மேலும்
கூட்டத்தில் மாநில விவசாய அணி முருகேச பாண்டி, மாவட்டதொண்டரணி கிருஷ்ணன்
வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துமாரி,
ஒன்றிய பொருளாளர் நாகராஜ் , செந்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் பழசரவணன், பாஸ்கரன்,
சுகநாதன் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button