முதுகுளத்தூரில் மாபெரும் மீலாது விழா பொதுக்கூட்டம்

முதுகுளத்தூரில் மாபெரும் மீலாது விழா பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அனைத்து ஜமாஅத் மற்றும் முதுவை நகர் உலமா மஜ்லிஸ் இணைந்து நடத்தும் “எல்லோருக்கும் சொந்தம் நபிகள் நாயகம் – சமூக நல்லிணக்க மீலாது விழா பொதுக்கூட்டம்”பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை முன்பு, முதுகுளத்தூரில் நடைபெற்றது
இவ்விழாவிற்கு மௌலானா அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத்* (கேரளா ஆலோசகர், முதுவை நகர் உலமா மஜ்லிஸ் & தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல்) அவர்கள் தலைமை தாங்கினார்
முன்னிலை: முதுகுளத்தூர் அனைத்து இஸ்லாமிய சங்கத் தலைவர்கள் & நிர்வாக பெருமக்கள், அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் அனைத்து சமுதாய சங்கத் தலைவர்கள்.
நிகழ்ச்சி நிரல்:
- கிராஅத்: மௌலானா காரி B.அஹ்மதுல் ஹஸன் நிஜாமி முனீரி ஹஜ்ரத் (ஆசிரியர், ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கமுதி)
- கீதம்: மௌலானா அல்ஹாபிழ் S.முகம்மது உஸ்மான் அலி அல்தாஃபி ஹஜ்ரத் (இமாம், ஜம்ஆ பள்ளிவாசல், கீழூர்)
- வரவேற்புரை: மௌலானா A.ஷாவல் ஹமீது பாகவி ஹஜ்ரத்
- துவக்கவுரை: மௌலானா A.முஹம்மது சிராஜ்தீன் மஹ்லரி ஹஜ்ரத்
வாழ்த்துரை: திரு. S.சந்திரசேகர் B.A.B.L. (அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்), நல்லாசிரியர் அல்ஹாஜ் S.காதர் முகைதீன் http://M.A.M.Ed., அருட்தந்தை A.ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, மௌலவி J.செய்யது சுல்தான் அலி பாதுஷா மஹ்லரி, திரு. K.கருப்பையா ஆச்சாரியார் (சமூக ஆர்வலர் & நிருபர், ஜெயா டிவி), திரு. S.துரைப்பாண்டியன், ஜனாப் A.ஜபருல்லா கான், ஜனாப் M.P.பக்கீர் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
சிறப்புரை:
- சகோ. J.அகத்தியன் (எ) அகஸ்டின் ஜோசப் (அருட்பணித்தளம், சென்னை) – தலைப்பு: சமூகம் எதிர்பார்க்கும் மனித நேயம்
- தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் (நிறுவனர், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம்) – தலைப்பு: ஆன்மீகம் போதிக்கும் சமூக அமைதி
- மௌலானா மௌலவி M.A.ஷவ்கத் அலி உஸ்மானி ஹஜ்ரத் (முதல்வர், அஸ்லமிய்யா அரபிக் கல்லூரி, கடையநல்லூர்) – தலைப்பு: எல்லோருக்கும் சொந்தம் நபிகள் நாயகம்
நன்றியுரை மௌலானா A.இப்ராஹீம் கனி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும், துஆ மௌலானா U.S.அப்துல் ரஹீம் உலவி ஹஜ்ரத் அவர்களும் நிகழ்த்துகின்றனர்.
இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர்,




