இராமநாதபுரம்
கமுதி பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில்இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைப்பு

கமுதி பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில்இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைப்பு

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள தனியார் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முகேஷ்கண்ணா மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் முகேஷ்கண்ணா மற்றும் முத்துக்குமார் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்திரவிட்டுள்ளார் மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரித்துள்ளார்




