இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் : மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை

இராமநாதபுரம் மாவட்டம், தேர்வு நிலை பேரூராட்சி முதுகுளத்தூரில், சுடலை ஊரணி பாதை 10 வது வார்டு, மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை, மழைக்காலங்களில் வருடம் தோறும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது என்று பல வருடங்களாக பொதுமக்களிடம் இருந்து புகார் கிடைக்கப்பெற்றும், வார்டு மெம்பரிடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை? இருசக்கர வாகனங்கள் இந்த நிலைமையை கடந்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது, இதுவரை தமிழக அரசிடம் இருந்து முதுகுளத்தூர் பேரூராட்சி பராமரிப்பு தேவை என்று எந்த நிவாரணமும் வரவில்லையோ?








