ஜூலை 1 முதல் 21 வரை 102 கிலோ கஞ்சா பறிமுதல் – 113 பேர் கைது!
ஜூலை 1 முதல் 21 வரை 102 கிலோ கஞ்சா பறிமுதல் – 113 பேர் கைது!
இராமநாதபுரம் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் ஜூலை 1 முதல் 21 ஆம் தேதி வரை நடத்திய அதிரடி சோதனையில் 102 கிலோ கஞ்சா, 30 போதை மாத்திரைகள் மற்றும் 30 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் போதைப் பொருள் குற்றங்களை ஒழிக்கும் நோக்கில் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு நடவடிக்கை விவரம்:
- நடைபெற்ற காலம்: 01.07.2026 முதல் 21.07.2026 வரை
- பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 88
- கைது செய்யப்பட்டவர்கள்: 113 பேர்
- பறிமுதல் செய்யப்பட்டவை: 102 கிலோ கஞ்சா, 30 போதை மாத்திரைகள், 30 கிராம் மெத்தாம்பெட்டமைன்
மாவட்ட எஸ்.பி., “போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக இராமநாதபுரத்தை மாற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.




