இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு விருது

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருதுதுணை முதல் அமைச்சர் வழங்கி கௌரவித்தார்

சென்னை :

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு சென்னையில் நடந்த விழாவில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருதை (STATE LEVEL BEST ANTI-DRUG VOLUNTEERING TEAM AWARD) தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

மாநில அளவில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தன்னார்வ குழுவிற்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருதுக்கான இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. இதனை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் வழங்கினார். இதற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த விருது பெறுவதற்காக சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு தாளாளர், தலைமை ஆசிரியர், ஜமாத் தலைவர்,கல்விக்குழு தலைவர்,தொடக்கப்பள்ளி தாளாளர், நர்சரி பள்ளி தாளாளர், கல்விக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button