கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கீழக்கரை நகர் கழகம் சார்பாக நகர் அவை தலைவர் சரவண பாலாஜி தலைமையில் எம் ஜி ஆர் அவர்களின் புகைபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.இந்த நிகழ்வில் நகர் துணை செயலாளர் குமரன், நகர் பொருளாளர் அரி. நாராயணன், நகர் கழக துணை செயலாளர் மரியம்மாள், மாவட்ட M.G.R மன்ற செயலாளர் இம்பாலா முஹமது உசைன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் விஜி ( எ) பிரஸ்னேவ், சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட துணை செயலாளர் ஹபீப் நெய்ணா மாவட்ட இலக்கிய அணி சேகர், மாவட்ட பிரதிநிதி இராஜேந்திரன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் வினோத்,. நகர் இளைஞரணி துணை செயலாளர் முணீஸ்வரன், அம்மா பேரவை துணை செயலாளர் அங்கு சாமி, மீனவரணி குமார் நகர் தொழில் நுட்ப பிரிவு பாலமுருகன் கோபால் 31 வது பூத் செயலாளர் ன். கார்த்திகேயன் மற்றும் வார்டு செயலாளர்கள் பொது மக்கள் கலந்தகொண்டனர்.




