இராமநாதபுரம்
பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது பெரிய பள்ளிவாசல் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, நமது மொகைதீன் பள்ளிவாசலில், சிறப்பான பயான் (25/07/20206 இரவு 7.00 மணி முதல் 8.00 மணிவரை) இனிதே நிறைவுற்றது,
இந்நிகழ்வில் நமது முகைதீன் பள்ளிவாசல் இமாம் மௌலானா. A. முஹம்மது இபுறாஹிம் ஆலிம் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற . அனைவரும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியானது சிறப்பாக நிறைவு பெற்றது, பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நமது ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
முன்னாள் ஜமாத் தலைவர் MMKM காதர் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை சங்கத்தின் துணைச் செயலாளர் முஷ்ரப் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்படுத்தியிருந்தார்.




