இராமநாதபுரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், பரமக்குடி மேற்கு ஒன்றியச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சேதுபதி மற்றும் கிளை கழகச்செயலாளர்கள் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





