ஆர்.எஸ். மங்கலம் மகான் புலவர் அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது…

ஆர்.எஸ். மங்கலம் மகான் புலவர் அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது….

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ். மங்கலத்தில் மஹான் புலவர் அப்பா தர்ஹா 43- வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது . 300 ஆண்டுகள் பழமையான இந்த தர்ஹாவில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் , நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் சிறப்பு துவா நடைபெற்றது , வரும் 1 -10- 2026 ஆம் தேதி நடைபெற உள்ள கந்தூரி விழாவில் அனைத்து மதத்தினருக்கும் நெய் சோறு வழங்கி இரவு 9-00 மணி அளவில் திருச்சி யூசூப் வழங்கும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும் இந்த ஏற்பாட்டை புலவர் அப்பா தர்ஹா கந்தூரி குழு தலைவர் அலி சுல்தான், செயலாளர் அசரப் அலி, பொருளாளர்.அயூப் கான் மற்றும் பொறுப்பாளர்கள் செய்யது இப்ராஹீம் அலி, பர்லா அப்பாஸ், கோடையிடி கேசர்கான், தென்றல் ஜலில், அஜ்மீர் , அன்வர், ஆலிம்கள் மன்சூர், நஜ்முதீன், மற்றும் ஜமாத்தார்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர் . ஏ. எம். அயூப் கான் மாவட்ட செய்தியாளர் ராமநாதபுரம்



