இராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டை சுமைய்யா (ரலி) இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் 4-ம் ஆண்டு விழா, ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சுமைய்யா (ரலி) இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் 4-ம் ஆண்டு விழா, ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள சுமைய்யா (ரலி) இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரும், முகம்மதியா பள்ளியின் தலைவருமான எஸ்டி முஹம்மது ஷாஜகான் தலைமை தாங்கினார். முகம்மதியா பள்ளி ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரிபாய் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் முஸ்லிம் பரிபாலன பைத்துல் மால் தலைவருமான ரஹ்மத்துல்லாஹ் துவக்க உரை நிகழ்த்தினார்.
முஸ்லிம் தர்ம பரிபாலன சபா தலைவர் செய்யது அகமது கபீர் மற்றும் டாக்டர் நிஜாமுதீன் வாழ்த்துரை வழங்கினர்
கல்லூரியின் தலைவரும், முகம்மதியா பள்ளிகளின் தாளாளருமான காஜா முயீனுதீன் அவர்கள் கல்லூரியில் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார், டாக்டர் பாத்திமா ஷானாஸ் பாரூக் மற்றும் டாக்டர் சபியா பிர்தௌஸ் ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மூன்றாம் ஆண்டு ஆலிமாக்கள் பட்டம் பெற்றனர்.
சிறப்புரை: விழாவில் சிறப்புரையாற்றிய ஷெய்க் அப்துல் மஜீத் மஹ்ழரி, மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார்:
- கல்வியால் உயர்வடைந்த பெண்களின் சிறப்பு
- வெட்க உணர்வு மங்கிவரும் இக்காலச் சமூகத்தில், இஸ்லாமிய ஆடை ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நிலைநிறுத்துவதில் ஆலிமாக்களின் முக்கியப் பங்கு
- கற்றதை வாழ்வில் நடைமுறைப்படுத்தி, பிறருக்கும் எடுத்துரைக்கும் பொறுப்பு ஆலிமாக்களுக்கு உள்ளது
மேலும், இராமநாதபுரம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரியின் முதன்மை ஆசிரியராகவும், கல்வியியல் பாடத்திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருபவராகவும் மெளலவி அப்துல் மஜீத் மஹ்ழரி திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டது.
அல் புகாரி இஸ்லாமிய கல்லூரி நிறுவனர் சலிமுல்லாஹ் கான், “இன்றைய காலகட்டத்தில் பெண்களின் மார்க்கக் கல்வியின் அவசியம் மற்றும் அதன் சமூகப் பங்கு” குறித்து உரையாற்றினார்.
விழாவில் ஏராளமான உலமாக்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.




