கவிதைகள் (All)
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் – 4.9.2026
ஆயக்கண்ணன் ,மாயக்கண்ணன்
தூயக்கண்ணன் ,நேயக்கண்ணன்
கீதை மூலம் பாதை காட்டிய
மேதைக்கண்ணன் ,ராதைக்கண்ணன்
ஆவணி , ரோகினி அஷ்டமி நாளில்
அவதரித்தவன் அழகிய கண்ணன் .
பாரதப் போர் முடிக்க பார்த்த சாரதியாய்
தேரது ஒட்டிய மாரதன் கண்ணன்
மாநிலம் காக்க .மாமனை அழித்த
மாதவ கண்ணன் யாதவ கண்ணன் .
அதர்மம் அழித்து, தர்மம் காக்க
அவதரித்து வந்த ஆண்டவன் கண்ணன்.
கண்ணன் சன்னதியில் ஒன்று கூடுவோம்.
கண்ணன் நாமம் தினமும் பாடுவோம் .
கண்ணன் பாதம் தினமும் நாடுவோம்.
கண்ணன் அருளை தினமும் தேடுவோம்.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்