இராமநாதபுரம்
தொண்டியில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை – பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தொண்டியில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை – பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பேரூராட்சி 11-வது வார்டு ஓடாவி தெரு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி.இதனை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க திரண்டனர். அப்போது செயல் அலுவலர் இல்லாததாலும், மற்ற அலுவலர்கள் உரிய பதில் அளிக்காததாலும் சலசலப்பு ஏற்பட்டது.குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே 3 மற்றும் 4-வது வார்டுகளிலும் இதே பிரச்சினை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.




