வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இலவசம் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இலவசம் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் தான். போலி விளம்பரம், இடைத்தரர்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் எந்த கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
அனைத்து சேவைகளையும் http://www.tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் அளவில் செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.




