ஆர்.எஸ். மங்கலம் C.S.I. சர்ச் மற்றும் ராமநாதபுரம் ராசி மருத்துவமனை நடத்தும் எலும்பியல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆர்.எஸ். மங்கலம் C.S.I. சர்ச் மற்றும் ராமநாதபுரம் ராசி மருத்துவமனை நடத்தும் எலும்பியல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது…

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் குருசேகரம் C.S.I சர்ச்.மற்றும் ராமநாதபுரம் ராசி மருத்துவமனை இணைந்து நடத்தும் எலும்பு மற்றும் மூட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குருசேகரம் & வட்டகை மன்ற தலைவர் பிரேம் கிறிஸ்து தாஸ் மற்றும் ஆர். எஸ். மங்கலம் C.S.I பயிற்சிஆயர் சாலமன் ராஜா ஆகியோர்கள் தலைமை தாங்கினார்கள் இதில், ராமநாதபுரம் ராசி மருத்துவமனை மருத்துவர்கள் விபத்து மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுனர் மருத்துவர் நாசர் அலி மற்றும் மூட்டு மாற்று தண்டுவட அறுவை சிகிச்சை நிபுனர் மருத்துவர் சமீர் அலி ஆகியோர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தார்கள், இதில் இலவச மருத்துவர் ஆலோசனை, ரத்த அழுத்த பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, இரத்த அளவு, சர்க்கரை அளவு பரிசோதனை, யூரிக் அமிலம் பரிசோதனை, இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன ,இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் ,
ஏ.எம்.அயூப் கான்,மாவட்ட செய்தியாளர் ராமநாதபுரம்



