கவிதைகள் (All)
தமிழ் எங்கள்!.
தமிழ் எங்கள்!.
*****””*
தமிழ் எங்கள் ஈன்றத்தாய்
தமிழ் எங்கள் தந்தையின் மூச்சு
தமிழ் எங்கள் நிலத்தின் ஊற்று
தமிழ் எங்கள் உறவுளின் பேச்சு!
தமிழ் எங்கள் எழில் நிறம்
தமிழ் எங்கள் மணக்கும் மணம்
தமிழ் எங்கள் வாழும் குணம்
தமிழ் எங்கள் வளர்இனம்!
தமிழ் எங்கள் செழிப்பின் வளம்
தமிழ் எங்கள் இறைவன் வரம்
தமிழ் எங்கள் வரலாற்றுக் களம்
தமிழ் எங்கள் வாய் மொழியும் சுகம்
தமிழ் எங்கள் வாழ்க்கை முறை
தமிழ் எங்கள் வேட்கை நிலை
தமிழ் எங்கள் போர்வை அணிகள்
தமிழ் எங்கள் வனப்பின் சுகம்!
தமிழ் எங்கள் வெற்றிப் போர்வாள்
தமிழ் எங்கள் வீரத் தின்தோள்
தமிழ் எங்கள் பகைவெல்லும் படை
தமிழ் எங்கள் புகழ் பாடி நிற்கும் அரங்கம்!
தமிழ் எங்கள் ஊண் உடல்
தமிழ் எங்கள் உயிர் பேச்சு
தமிழ் எங்கள் வான்மழை
தமிழ் எங்கள் வளம் பேசி நிற்கும் வரலாறு!!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி