இராமநாதபுரம்

திருவாடனை அருகில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

திருவாடனை அருகில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே குலநாத்தி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. பள்ளிக்கு அருகில் ஆழமான ஊரணி உள்ளதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், கழிப்பிடத்திற்கு செல்லும் வழியில் பழமையான, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சுற்றுச்சுவர் கட்டவும், ஆபத்தான கட்டிடத்தை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளியில் 15 சிறு குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையமும் அருகிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button