கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்

கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் சார்பில் முதல் கலந்தாய்வு கூட்டம் முகம்மது காசிம் அப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் தெருவின் வளர்ச்சி மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அனைவரும் ஒருமனதாக 5 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தெருவிற்கு தேவையான அடிப்படை பாதாள சாக்கடை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது, தெருவில் குப்பைகளை முறையாக கையாள்வது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது,தெருவில் உள்ள சிறுவர்களுக்கு மார்க்க கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கௌரவ தலைவர் அபுபக்கர் சித்திக்
-தலைவர் அகமது கான் ,துணை தலைவர் சஹாதத் ,செயலாளர் ஹபீப் ரஹ்மான், துணை செயலாளர் ஹாரிஸ்,
இணை செயலாளர் ஹஜ்ஜுல் ஹக் ,பொருளாளர் முஹைதீன் பஹத்,துணை பொருளாளர் முகம்மது ரியான்,நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் பாக்கர், முகம்மது அசன் முகைதீன் ,முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் தேர்வு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தெரு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தீர்மானங்களை விரைவில் செயல்படுத்த உரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.



