இராமநாதபுரம்

கமுதி அருகே திருச்சிலுவைபுரம் கிராமத்திற்கு புதிய பேருந்து வசதி

கமுதி அருகே திருச்சிலுவைபுரம் கிராமத்திற்கு புதிய பேருந்து வசதி
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது – மக்கள் மகிழ்சி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த தலைவனாயக்கன்பட்டி மற்றும் திருச்சிலுவைபுரம் ஆகிய கிராமங்களுக்கு புதிய பேருந்து வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வு விவரம்:
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி முன்னிலையில் பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

புதிய பேருந்து வசதி தொடங்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்சி தெரிவித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவை இதன் மூலம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button