இராமநாதபுரம்

காட்டுப்பன்றிகளின் நடமாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே பொட்டல்புலி பகுதியில் உள்ள கரிசல்புலி கிராமத்தின் விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் விளைநிலத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித் தொழிலாளி இருளாயி (60) என்பவர் காட்டுப்பன்றி தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காடமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி அழகர் (45), கரிசல்புலியில் இருந்து அரியமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது காட்டுப்பன்றிகள் விரட்டி தாக்கியதில் காயமடைந்தார். அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காட்டுப்பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று பயிர்களை பார்வையிடுவதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button