வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம்

ராமநாதபுரம் :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ஏ.வி.சந்திரசேகரன் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குகிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலாடி துணை வட்டாரவளர்ச்சி அலுவலராக பணியாற்றிய எல்.மேகராஜ் கமுதி வட்டாரவளர்ச்சி அலுவலராக பதவிஉயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.
இதுபோல திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜி.பாலதண்டாயுதம் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்ஆகவும் மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் போ.ஜெயமுருகன் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புகண்ணன் கடலாடி கிராமஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் கடலாடியில் பணியாற்றிய வெ.ஜெய ஆனந்தன் நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நயினார் கோவிலில் பணியாற்றிய ஆரோக்கியமேரி சாரால் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் நயினார்கோவில் கிராமஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.விஜி ஆர்.எஸ்.மங்கலம் கிராமஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்ஆகவும் ஆர்.எஸ்.மங்கலத்தில் பணியாற்றிய வெ.கிருஷ்ணன் ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் ராமநாதபுரத்தில் பணியாற்றிய ஆர்.சுதாகர் திருவாடானை கிராமஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்திரவிட்டுள்ளார்.




