காதல் விவகாரத்தில் இளைஞரின் தாய் தங்கை உட்பட 3 பேர் மீதுதாக்குதல் . . . . .

காதல் விவகாரத்தில் இளைஞரின் தாய் தங்கை உட்பட 3 பேர் மீதுதாக்குதல் . . . . .

ராமநாதபுரம் . . ராமநாதபுரம் மாவட்டடம் கமுதியை அடுத்துள்ள மண்டலமாணிக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எ.இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை(40) இவரது மனைவி முனீஸ்வரி இவர்களது மகளும் அதே ஊரைச்சேர்ந்த சுவேந்திரனின் மகனும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுவேந்திரனின் வீட்டுக்குள் புகுந்த செல்லத்துரை அவரது உறவினர்கள் என 7 பேர் கொண்ட கும்பல் சுவேந்திரனின் மனைவி விஜயலட்சுமி (50) மகள் கிருத்திகா (21) இவர்களது உறவினர் நாகஜோதி (26) உள்ளிட்ட 3 பேரை கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம் இதில் காயமடைந்த மூவரும் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது தொடர்பாக விஜயலட்சுமி மண்டலமாணிக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செல்லத்துரை இவரது மனைவி முனீஸ்வரி(37) இவர்களது உறவினர்கள் சரவணன் (35) இவரதுமனைவி ராஜேஸ்வரி (27) அர்சுணன் (65) முத்தழகு (67) ரஞ்சிதம் (61) ஆகிய 7 பேர்மீது மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்




