இராமநாதபுரம்
தொண்டியில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

தொண்டியில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (ஜூலை.16) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.




