சாலையில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பவித்ரா (47). தங்க சங்கிலியை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில், நகையைக கண்டெடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரான கடலாடி கருங்குளத்தைச் சேர்ந்த முருகன், தங்கச் சங்கிலியை முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் முன்னிலையில் நகையைத் தொலைத்த பவித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நகையைக் கண்டெடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த முருகனை போலீஸார் பாராட்டி கௌரவித்தனர்.




