இராமநாதபுரம்

அரியமான் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம்?

அரியமான் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம்?


நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கடற்கரைகளில் இராமநாதபுரம் மாவட்டத்தின் அரியமான் கடற்கரையும் ஒன்று இங்கு சமீப காலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், வாகனங்களில் வரும் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.10 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

வெளியூரிலிருந்து வரும் வேன், மினி பஸ் , சுற்றுலா பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் 20 முதல் 30 பேருக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்

பொதுவாக சுற்றுலாத் தலங்களில் வாகனங்களுக்கான நுழைவு மற்றும் பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், இயற்கை அளித்த கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொரு நபரிடமும் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது எனக் கூறிய பொதுமக்கள்,

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button