தொண்டி கேஸ் ஏஜென்சியில் இ-கேஒய்சிக்கு ரூ.250 வசூல்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு
தொண்டி கேஸ் ஏஜென்சியில் இ-கேஒய்சிக்கு ரூ.250 வசூல்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் இ-கேஒய்சி புதுப்பிக்க காலக்கெடு இன்றுடன் முடிவதாக பரவிய தகவலால், கைக்குழந்தைகளுடன் ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் குவிந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவோ, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவோ ஏஜென்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும், இலவசமாக செய்ய வேண்டிய இ-கேஒய்சி பதிவுக்கு நபர் ஒருவருக்கு ரூ.250 வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை ஏஜென்சி நிர்வாகம் மறுத்துள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் இ-கேஒய்சி புதுப்பிக்காத நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து தொண்டி சுற்றுவட்டார கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




