இராமநாதபுரம்
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் – பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசனை

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் – பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசனை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நினைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.



