இராமநாதபுரம்
திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு ஒன்றியம் சார்பில் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என்ற தலைப்பில் பிரம்மாண்ட தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவாடானை மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் நடந்த கூட்டத்தில், தலைமை உரையாக மாவட்ட தலைவர் முரளிதரன் உரையாற்றினார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாஜகவின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டணி கட்சி நிர்வாகிகள்
பாஜக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்
ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.




