General News

கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு சேவை முகாம்

கீழக்கரை, ஜூலை, 25
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு அரசு சேவை மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி மற்றும் சாயல்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இந்த முகாமை நடத்தினார்

இம்முகாமிற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமை வகித்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா முகாமிற்கு பொறுப்பேற்றார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி மற்றும் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் வரவேற்றனர். அனைத்து துறை அலுவலர்களும் முகாமில் பங்கேற்றனர்.

நகராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாமில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், குடும்ப அட்டை, பட்டதாரி சான்று, ஆதார் அட்டை திருத்தம், தாட்கோ மூலம் கடன் உதவி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button