வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155 வது பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்று, தியாகம் மற்றும் தமிழினத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். இதனைதொடர்ந்து அமைச்சர் ராஜீவ் தலைமையில் அதிகாரிகள், தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.





