கீழக்கொடுமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனோந்தல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

கீழக்கொடுமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனோந்தல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?.

முதுகுளத்தூர், ஜுன்.13
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழக்கொடுமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் கடந்த 20 வருடங்களாக குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த நிலையில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறிய அளவிலான தொட்டி ஒன்றை கட்டினர்.
அதில் அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீரும் பெயரளவுக்கு வழங்கப்பட்டு வந்தது .
மேலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு பைக்,சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதாகவும் இருசக்கர வாகனங்கள் இல்லாத பெண்கள் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் டிராக்டர் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீரை ஒரு குடம் பத்து ரூபாய் விலை கொடுத்து வாங்குவதாகவும் அந்த தண்ணீர் குடித்தால் கல் அடைப்பு, காய்ச்சல் . கேன்சர், உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குடிநீர் வாரியத் துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தால் பேரளவிற்கு மட்டும் அந்த நேரத்தில் ஐந்து நிமிடங்கள் ஒரு குடம் பிடிக்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் விட்டு மீண்டும் அடைத்து விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனால் தட்டானேந்தல் கிராம பெண்கள் காவிரி குடிநீர் வருவதற்காக கட்டப்பட்ட தொட்டியின் அருகில் காலி குடங்களுடன் தண்ணீருக்காக காத்துக் கிடந்தனர் .
தேர்தல் நேரத்தில் வரும் அரசியல்வாதிகள் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்ப்போம் என சொல்லி 20 ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு உள்ளனர் இந்த கிராம மக்கள் .
பலமுறை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தும் புகார் கொடுத்த மறுநாள் அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சரி செய்யப்படும் என சொல்லிவிட்டு சென்ற பிறகு குடிதண்ணீர் குழாயை பார்த்து ஏங்கும் நிலையில் தான் தட்டானேந்தல் கிராம மக்கள் உள்ளனர்.
தண்ணீரை இல்லாத (வராத) கிராமத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்க குழாய் வசதி ஏற்பாடு செய்தும் அந்தக் குழாய்கள் அனைத்தும் குடிநீர் வராததால் சேதமடைந்து ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பும் காட்சி பொருளாகவே உள்ளது.
இந்த ஊரில் உள்ள குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக தண்ணீர் வராமல் நிலத்தைப் போலவே குடிநீர் குழாயும் வறண்டு கிடக்கிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒரு மேல்நிலைத் தொட்டி அமைத்து இந்த கிராமத்திற்கு குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பதை இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இப்பகுதி மக்கள் அன்றாட கூலி வேலை செய்தும், கருவே ல வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
விடியல் (தி மு க ) ஆட்சியில் தான் தண்ணீர் கிடைக்கவில்லை விசில் (தவெக) ஆட்சியிலாவது இனிமேலாவது பகுதி மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.




