இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அமைச்சர் மதன் ராஜாவுக்கு தவெக மாவட்டசெயலாளர் தலைமையில் உற்சாக வரவேற்பு

இராமநாதபுரத்தில் அமைச்சர் மதன் ராஜாவுக்கு தவெக மாவட்டசெயலாளர் தலைமையில் உற்சாக வரவேற்பு

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பு அமைச்சர் மதன் ராஜா இராமநாதபுரம் வருகை தந்தார்.
அமைச்சரை வரவேற்க, அச்சுன்தவயல் கிராமத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் மாவட்ட, நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் ஆயிஷா, நாகவல்லி, நகர் நிர்வாகி முபீத், இளைஞர் அணி அமைப்பாளர் முஜீப், ஐ.டி விங் சங்கர பாண்டி, கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் கிஷோர், சட்டம் ஒழுங்கு அணி அமைப்பாளர் முகமது அப்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், 10வது வார்டு செயலாளர் சக்தி கலா, மகளிர் அணி நிர்வாகி மாலா, 2வது வார்டு செயலாளர் ராஜவேலு உள்ளிட்ட நகர நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று அமைச்சரை வரவேற்றனர்.
நிர்வாகிகளின் உற்சாக வரவேற்பை அமைச்சர் மதன் ராஜா ஏற்றுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button