இராமநாதபுரம்

கீழக்கரை நகராட்சி – நாய் கருத்தடை மையம் (ABC Center) திறப்பு விழா

கீழக்கரை நகராட்சி – நாய் கருத்தடை மையம் (ABC Center) திறப்பு விழா :

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் பி. மதன்ராஜா மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் . மு. சிவகுரு பிரபாகரன், இணைந்து 55 லட்டத்தில் கட்டப்பட்ட நாய் கருத்தடை மையம் (ABC Center) கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.
இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி,
மண்டல இணை இயக்குநர் மரு.ரவிச்சந்திரன் உதவி இயக்குனர் மரு.முருகன் மாவட்ட விலங்குகள் நல அலுவலர் மரு.பிரின்ஸ் இளம்பரிதி கீழக்கரை உதவி மருத்துவர் லீலாவதி,
நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button