இராமநாதபுரம்

கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் கமுதி வட்டங்களில் பட்டா, உழவர் அட்டை ,மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் அட்டை, வழங்கிட பொதுமக்கள் கோரிக்கைகளை உடனே நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்….

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் பட்டா. உழவர் அட்டை, மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்தல் தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன இதன் தொடர்ச்சியாக திருவாடானை மற்றும் கமுதி வட்டங்களில் 23 -7 -2026 மற்றும் 24-7-2026 தேதிகளில் பட்டா மாறுதல் பட்ட மேல்முறையீடு கணிணி திருத்தம் உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் திருவாடானை மற்றும் கமுதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் முறையே ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் திருவாடானை மற்றும் கமுதி வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பட்டா உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பான கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனுச் செய்து உடனடியாக பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறது, ஏ.எம்.அயூப்கான் மாவட்ட செய்தியாளர் ராமநாதபுரம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button