இராமநாதபுரம்
எஸ்டிபிஐ கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று ஏப்.02 தேர்தல் பணிக்குழு கூட்டம் தொகுதி தலைவர் முகம்மது ஹனீப் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.



