இராமநாதபுரம்

அபிராமத்தில் கலைஞர் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக அபிராமம் பேரூர் கழகம் சார்பில் கிடாமுட்டு போட்டி 60 ஆட்டு கிடாய்கள் பங்கேற்பு

அபிராமத்தில் கலைஞர் 102 வது பிறந்த நாள்
விழாவை முன்னிட்டு திமுக அபிராமம் பேரூர் கழகம் சார்பில் கிடாமுட்டு போட்டி 60 ஆட்டு கிடாய்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் திமுக பேரூர் கழகம் சார்பில் டாக்டர் கலைஞரின் 102 – வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிடா முட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
அபிராமம் – சந்தைபேட்டை எதிரே நடைபெற்ற இந்த கிடாமுட்டு போட்டியை
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இப்
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக அபிராமம் பேரூர் கழக செயலாளர் ஜாகிர்உசேன் செய்திருந்து, அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ராமர்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்
தமிழ்செல்விபோஸ், துணை சேர்மன் அய்யனார், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தன்,
கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர்
விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழா முடிவில்
அபிராமம் பேரூராட்சி துணைத்தலைவர் மாரி நன்றியுரையாற்றினார். இப் போட்டியில் சென்னை திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30 ஜோடி ஆட்டு கிடாய்கள் என 60 கிடாய்கள் பங்கேற்றன. பந்தயமாக 60 முட்டுகள் ஒவ்வொரு கிடாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்து 60 முட்டுகள் இரண்டு கிடாயும் வாங்கினால் இரண்டு கிடாய்க்கு பரிசும் 60 முட்டுகள் தாங்காமல், ஒதுங்கி சென்ற ஆடு தோற்றதாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆடுகள் ஒன்றையொன்று முட்டுவது இடி இடித்தது போல் இருந்தது.இதில் வெற்றி பெற்ற கிடாய் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சில்வர் அண்டா உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
இப்போட்டியை அபிராமத்தில் இருந்து மட்டுமல்லாமல் மதுரை, கமுதி, சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் இருந்து 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இப்போட்டியை கண்டு ரசித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button