இராமநாதபுரம்முதுகுளத்தூர்
புதிய பேருந்து சேவை துவக்கம்

புதிய பேருந்து சேவை துவக்கம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை துவக்க விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக வனத்துறை மற்றும் கதர்கிராம தொழில்கள் வாரியத்துறைஅமைச்சர்ஆர்,எஸ், ராஜகண்ணப்பன் அவர்களிடம் பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் முதல் மதுரை வரை பழைய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் போக்குவரத்து கழக அதிகாரிகள், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



