இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கல்வியாளர் அணி சார்பில் ஆசிரியர்கள் கௌரவிப்பு

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கல்வியாளர் அணி சார்பில் ஆசிரியர்கள் கௌரவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவ்வாறு இந்த விருதினை பெற்ற ஆசிரியர்களுக்கு எஸ.டி.பி.ஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பாக பொன்னாடை போர்த்தி, வாழ்த்துக் கூறி கௌரவிக்கப்பட்டார்கள்.
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரான திருமதி எம். கோகிலா அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவ படுத்தப்பட்டார்கள். இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கல்வியாளர் அணி மாவட்டத் தலைவர் என்ற முறையில் நானும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நஜ்முதீன் அவர்களும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது அவர்களும், இராமநாதபுரம் நகர் செயலாளர் வதூத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அதேபோல் சக்கரக்கோட்டை ஜமாத் தலைவர் மதிப்பிற்குரிய துங்கு அப்துர் ரஹ்மான் அவர்களும், ஜமாத் துணைத் தலைவர் சாதிக் அலி அவர்களும், ஜமாத் பொருளாளர் பஷீர் அகமத் அவர்களும் மற்றும் ஜமாத் நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். இந்நிகழ்வில் சக்கரக்கோட்டை யாதவர் சங்கம் கார்த்திக் அண்ணன் அவர்களும் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவரும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.வண்ணாங்குண்டு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எஸ். ஜெயசுதா அவர்களுக்கு அந்த பள்ளியின் சார்பாக விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இந்நிகழ்வில் வண்ணாங்குண்டு ஜமாத் தலைவர் மதிப்பிற்குரிய நிஜாம்கான் அவர்களும் மற்றும் ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். அவர்களோடு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் சபீக் ரஹ்மான் அவர்களும் மற்றும் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் வண்ணாங்குண்டு சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர் ஆசிரியைகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை கூறி கௌரவித்தார்கள். அதேபோல் தலைமையாசிரியர் அவர்களும் வந்திருந்த அனைத்து முக்கியஸ்தர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அவர்களின் பள்ளியின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு தங்களுடைய நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்க் சித்தார்கோட்டையில் இயங்கி வரும் முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் எஸ்.சைய்யது இப்ராஹிம் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கல்வியாளர் அணியின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button